இது முதன்முறை அல்ல !
ஊர் முழுவதும்
வம்பிழுத்துக்கொண்டு வரும் ஒருவன்
வீட்டிற்குள் நிம்மதியாக தூங்கிவிட முடியுமா? அதுபோல்தான்
அமெரிக் காவின்
பதட்டமும் பயமும்.
உலகநாடுகளின் மனித உரிமைக்காவலன் தான்மட்டுமே என்று
தம்பட்டம் அடித்துக்
கொண்டும், மூன்றாம்
உலகநாடுகளை பயங்கரவாத நாடுகளாக சித்தரித்து, தனது
ஆயுத உற்பத்தியை
அவர் களுக்கு
சட்டத்தின் மூலமாக அரசு முறையில் ஒரு
விற்பனையும், சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளுக்கு ஒரு விற்பனையும் நடத்தி வருவது
உலகறிந்த விஷயமே!
தனது சிஐஏ
அமைப்பின் மூலம்
ஒரு நாட்டிற்குள்
கலகம் விளைவிப்பதும்,
உள்நாட்டு அமைதியைக்
குலைப்பதும், அதன் விளைவாக உருவாகும் தீவிரவாத
அமைப்பைக் காரணம்
காட்டி அத்துமீறி
அவர்களின் நாட்டிற்குள்
நுழைந்து மனித
உரிமையைக் காப்பற்ற
வந்த ரட்சகன்
போல செயல்பட்டு,
உள்நாட்டு ஜனநாயக
மாண்பைக் குலைத்து,
தனது பொம்மை
அரசை நிறுவுவதும்,
அந்நாட்டு செல்வங்களை
கொள்ளையடிப்பதையும் வழக் கமாக
கொண்டுள்ள அமெரிக்காவால்
எப்படி நிம்மதியாக
தூங்கிவிட முடியும்?
ஈராக்கில் அணு
ஆயுதம் இருப்பதாக
அத்துமீறி தலையிட்டு
அந்நாட்டு அப்பாவி
மக்களைக் கொன்றுகுவித்து,
அதிபர் சதாம்
உசேனை தூக்கிலிட்டு,
தனது பொம்மை
அரசை நிறுவி,
அந்நாட்டு எண்ணெய்
வளங்களை சூறையாடி
வருகிறது. இதுபோன்ற
உதாரணங் கள்
ஏராளமாக உள்ளன.
இப்படி ஈராக்,
ஈரான், லிபியா,
கியூபா, சிரியா,
வடகொரியா, ஆப்கா
னிதான், ஏழை
நாடானா சோமாலியாவைக்
கூட விடாமல்
அமெரிக்காவின் கொடுங்கரங்கள் நீண்ட பட்டியல், நீண்டுகொண்டே
செல்லும். உலகநாடுகள்
மீது தனது
அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்களின்
தொலைபேசி உரையாடல்களை
ஒட்டுக்கேட்பது. உலக நாடுகளின் அரசு மின்னஞ்சல்களை
கபளிகரம் செய்வது,
அரசுகளுக்கு சொந்தமான இணையதளங்களை முடக்குவது, விவரங்களை
திருடுவது போன்ற
நவீன அறிவியலையும்
தனது ஏகாதிபத்தியத்
திற்கு பயன்படுத்தி
வருகிறது. இதில்
நமது பிரதமர்
அலுவலகம் உட்பட
மற்ற இந்திய
தலைவர்களும் அடங்குவர். இந்தியா போன்ற வளரும்
நாடுகளின் அசைவை
உண் ணிப்பாக
கவனித்து வருகிறது.
அமெரிக்காவின் இத்த கைய அத்து மீறல்களை
வெளியிட்ட அமெரிக்க
முன்னாள் படைவீரர்
நோடனை குற்றவா
ளியாக அறிவித்து
தேடிவருகிறது. இந்தியா போன்ற மிகப்பெரும் ஜனநாயக
நாடுகள் கூட
இத்தகைய அத்துமீறல்களை
அமைதியாக வேடிக்கைப்
பார்த்துகொண்டு அமெரிக்காவின் அடிமையாக இருப்பது வேதனைக்குரியது.
இப்படி உலகம்
முழுவதும் அக்கிரமங்
களையும் அத்துமீறல்களையும்
செய்து உலக
அமைதியைக் கெடுத்துகொண்டிருக்கும்
அமெரிக்கா எப்படி
அமைதியாகவும் நிம்மதியா கவும் இருந்துவிட முடியும்.
அதன் விளைவாகவே
தனது உள்நாட்டு
பாதுகாப்பு என்ற பெயரில், உலகநாடுகளின் தலைவர்களை
வழக்கமான பரிசோதனை
என்ற பெயரில்
உடைகளைக் களைந்து
அவமானப் படுத்தும்
செயலை செய்து
வருகிறது அமெரிக்கா.
அதிலும் குறிப்பாக
முலீம் மதத்தை
சார்ந்த பெயரானால்
அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு மிகக்கடுமையான சோதனைக்கும்
உட்படுத்தப்படுகின்றனர்.
இப்படி இந்திய
பிரதிநிதிகளை அமெரிக்க காவல்துறை அவமதிப்பது முதல்
முறையல்ல. இதற்கு
முன்பு பாஜக
ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக
இருந்த ஜார்ஜ்பெர்னான்டசை
ஆடைகளைக் களைந்து
பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். ஆகப் பெரும் இந்திய
ஜனநாயக குடியரசின்
தலை வராக
இருந்தபோதே அப்துல்கலாம் பரிசோத னைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார். திரைப்பட நடிகர்
கமல்ஹாசன், ஷாருக்கான் போன்ற புகழ்பெற்ற பலரும்
இந்த பரிசோதனையி
லிருந்து தப்பவில்லை.
இந்திய துணைத்தூதர்
தேவயாணி, அவருக்கு
உதவியாளராக பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்ட்
என்பவருக்கு ஒத்துக்கொண்ட சம் பளம் கொடுக்காத
காரணத்தினாலும், கூடுதலான நேரம் வேலை வாங்கியதாலும்,
சங்கீதா, தேவயாணியின்
வீட்டை விட்டு
வெளியேறிய பிரச்சனையில்
மோசடி விசா
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்
எதிரொலியாக இந்திய அரசு அமெரிக்க தூதர்களுக்கு
வழங்கியுள்ள சிறப்பு சலுகைகளையும், அவர்தம் குடும்பங்களுக்கு
வழங்கியுள்ள சிறப்பு தூதரக அடையாள அட்டை
களை திரும்ப
ஓப்படைக்கவும் கோரியுள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகளை
இப்படி உடை
களைக் களைந்து
இந்தியா சோதனை
நடத்து கிறதா?
அமெரிக்க பிரதிநிதிகளுக்கு
இந்தியா கொடுக்கும்
மரியாதையை, இந்திய பிரதிநிதி களுக்கும் கொடுக்கவேண்டும்
என்ற குறைந்த
பட்ச பரபர
இங்கிதம் கூட
அமெரிக்காவிற்கு இல்லை.
இதற்கு முன்பு
நடைபெற்ற இப்படிப்
பட்ட முறையற்ற
பரிசோதனைகளின் போதே இந்தியா தனது கடுமையான
எதிர்ப்பை வெளிப்
படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்கா விற்கு
எதிராக
நடவடிக்கை எடுப்பதற்கு பாஜக, காங்கிர இரண்டு
கட்சிகளுமே திராணியற்று கிடந்ததுதான் வரலாறு. வரவிருக்கும்
நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு,
தூக்கத்திலிருந்து விழித் தெழுந்தது
போல, இதற்கு
முன்னர் இதுபோன்று
நடக்காதது போலவும்
பாஜகவும் காங்கிரசும்
கூப்பாடு போடுவது
வேடிக்கையானது.
முன்னாள் அமெரிக்க
அதிபர் புஷ்ஷின்
மீது
ஈராக் பத்திரிகையாளர் தனது காலணியை கழட்டி
வீசியது போலவும்,
அமெரிக்காவே! எங்கள் நாட்டினுள் நுழையாதே! என்று
நடைபெறும் போராட்டங்கள்
போலவும், உலகத்தில்
வேறெந்த நாட்டிற்கும்
இவ்வளவு அவமானம்
ஏற்பட்டதில்லை. அமெரிக்காவிற்கு வேண்டுமானால்
இவையெல்லாம் அவமானமாக இல்லாதது போல் தோன்றலாம்.
ஆனால், இந்தியாவிற்கென்று
உலகநா டுகள்
மத்தியில் நல்ல
மதிப்புண்டு. நல்மதிப்பு பெற்ற அணிசேரா இயக்கத்தை
உருவாக்கி தலைமை
தாங்கிய பாரம்பரியம்
இந்தியாவிற்கு உண்டு. அதனை கருத்தில் கொண்டு, மதியாதார்
தலைவாசல் மிதியாதே
என்ற அவ்வையின்
வாக்கு படிப்பதற்கு
மட்டுமல்ல. வாழ்க்கையிலும் அரசியலிலும்
கடைபிடிப் பதற்கும்
தான் என்று,
இனியாவது இந்திய
அரசு உணருமா
என்பதுதான் இந்தியாவின் கோடாணு கோடி மக்களின்
எதிர்பார்ப்பு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக